» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆசிரியை வீட்டில் 7பவுன் நகை திருட்டு: பணிப்பெண் உட்பட 2 பேர் கைது!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 4:09:22 PM (IST)
தூத்துக்குடியில் தலைமை ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகையை திருடிய பணிப்பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் மனைவி அலமேலு (54), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் தூத்துக்குடி நந்தகோபால புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி மாரியம்மாள் (46) என்பவர் பணிப்பெண் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி அலமேலு வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின் திருடு போய்விட்டது. இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் அலமேலு அளித்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தியதில், பணிப்பெண் மாரியம்மாள் மற்றும் அவரது தம்பி, சங்கரநாராயணன் மகன் இசக்கிமுத்து (43) என்பவருடன் சேர்ந்து நகையை திருடியது தெரியவந்தது.
இதயடுத்து போலீசார் அக்காள், தம்பி இருவரையும் கைது செய்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
