» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!

திங்கள் 30, செப்டம்பர் 2024 10:39:26 AM (IST)

தூத்துக்குடியில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பி & டி காலனி 13வது தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் செல்வகணபதி (48), இவர் தூத்துக்குடி வணிகவரி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். 

பின்னர் இன்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்க்க போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.12,500 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் செல்வ கணபதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory