» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நாய் கண்காட்சி: பார்வையாளர்கள் உற்சாகம்!

ஞாயிறு 29, செப்டம்பர் 2024 9:47:08 PM (IST)



தூத்துக்குடியில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் 18 வகையான நாய்களின் திறமைகளைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். 

தூத்துக்குடியில் இன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நம்ம ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பவத் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். 

தொடர்ந்து தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் லேபர் டாக் மின் பின் கோல்டன் ரெட்ரீவர் டாபர்மேன் ராட்வீலர் அமெரிக்கன் புள்ளி ராஜபாளையம் இகல் அமெரிக்கன் டாபர்மேன் ஜெர்மன் ஷெப்பர்ட் சிச்சு சுபா குவா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாய் வகைகள் மற்றும் பாரம்பரிய நாட்டு நாய் வகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாய்களுடன் வந்த நாய்களின் உரிமையாளர்கள் கூறியதற்கு ஏற்ப நாய்கள் செயல்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது


இந்த நிகழ்ச்சி சிதம்பரநகர் 3-வது தெருவில் இருந்து பிரையண்ட் நகர் 10-வது தெரு வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதை முன்னிட்டு சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதைமுன்னிட்டு நேற்று மதியம் முதல் பிரையண்ட்நகர் மெயின் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பிரையண்ட்நகர் கிழக்கு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


மக்கள் கருத்து

ஏரியா காரன்Oct 1, 2024 - 06:11:50 PM | Posted IP 162.1*****

புதுசாக போட்ட ரோட்டை ஓட்டை போட்டு விட்டார்கள், இனி மழைக்காலம் வந்துட்டு, சிறிய ஓட்டை பெரிய பள்ளமாக உருவாக்க வாய்ப்பு உண்டு, மாநகராட்சி சாக்கடை துட்டு பயலுகளால் தான் தூத்துக்குடி சாக்கடையாகி நாசமாக போகிறது.

சாமானியன்Sep 30, 2024 - 12:53:12 PM | Posted IP 172.7*****

சாலையை குடைந்து கம்பு நட்டுவிட்டு அதை அப்படியே விட்டு விட்டீர்கள்...இனி அச்சாலையின் கதி... சிறிது சிறிதாக பெயர்ந்து மோசமான நிலைக்கு செல்லும்... என்று உணர்வீர்கள் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory