» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வஉசி கல்லூரியில் ஃபீனிக்ஸ் 2024 கலைப் போட்டிகள்!

சனி 28, செப்டம்பர் 2024 11:26:16 AM (IST)



தூத்துக்குடி வஉசி கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான மாபெரும் இலக்கியக் கலைப் போட்டிகள் "ஃபீனிக்ஸ் 2024" நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரின் பாரம்பரியமிக்க வ.உ.சிதம்பரம் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் இலக்கியக் கலைப் போட்டிகள் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. இதில், 9 கல்லூரிகள் சார்பாக 170 போட்டியாளர்கள், பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, Bookmark making, நாடகம், வினாடி வினா, குழுப்பாடல் மற்றும் ஊமை நாடகம் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். 

கல்லூரி செயலர் ஏ. பி. சி.வி சொக்கலிங்கம் தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினார். ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ராணி பிரியதர்ஷினி வரவேற்புரை நல்கினார். பேராசிரியர் ஜோக்கிம், புனித சேவியர் கல்லூரி சிறப்புரை ஆற்றினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல் பரிசு, வெள்ளி சுழற்கோப்பை மற்றும் பத்தாயிரம் பரிசு தொகை பெற்றது.

திருச்செந்தூர் ஆதித்தனர் கல்லூரி இரண்டாம் பரிசு மற்றும் ஏழாயிரம் பரிசுத் தொகையும், பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி மூன்றாவது இடத்தையும் ஐந்தாயிரம் பரிசுத் தொகையும் பெற்றனர். கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினார். விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் V.J ஆண்ட்ரூஸ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இண்டோனேஷன் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் கல்யாணசுந்தரம், போட்டிக்கான பரிசுத்தொகையும், வெள்ளி சுடற்கோப்பையும் வழங்கி விழாவை சிறப்பித்தார். ஆங்கிலத் துறைத்தலைவி பேராசிரியர் சில்வியா வரவேற்புரை நல்கினார். துணைப் பேராசிரியர் ராணி பிரியதர்ஷினி, ஃபீனிக்ஸ் குறித்த முன்னுரை வழங்கினார். ஆங்கிலத்துறை மாணவர்கள் சார்பாக ஆங்கில நாடகம் ஒன்றை நிகழ்த்தி, ஃபீனிக்ஸ் முன்னோட்ட காணொளி வெளியிட்டனர். நிறைவாக ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ஆனந்த வைஷ்ணவி நன்றியுரை வழஞ்கினார். 


மக்கள் கருத்து

UnknownSep 29, 2024 - 02:35:31 PM | Posted IP 162.1*****

Very worst competition

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory