» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் : பெண் உட்பட 2பேர் கைது!

புதன் 18, செப்டம்பர் 2024 8:36:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக வந்தவர் என 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (18.09.2024) பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  அவர்களிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்தப் பெண் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம் மாநில கல்விதுறையில் உதவி செயலாளராக (IAS) இருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். 

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை மேற்கொண்டதில்  அவர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த  மங்கையற்கரசி (44) என்பதும் கல்வித்துறை உதவி செயலாளர் என்று பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. 

மேலும் அவருடன் அவருக்கு உடந்தையாக வந்தவர் தாழையுத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் (42) என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மங்கயைற்கரசி மற்றும்அவருடன் வந்த ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory