» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : கால அவகாசம் நீட்டிப்பு

புதன் 18, செப்டம்பர் 2024 8:19:58 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு / முதலாமாண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேரம் சேர்க்கை விண்ணப்பபதிவு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை (பிளஸ்-2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி ) விண்ணப்பத்தினை https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் 27.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். 

இதில் மாணவ / மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ். சாதிசான்றிதழ், மற்றும் விண்ணப்பத்தார் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்கள் முதலாமாண்டு சேர்க்கை பெறலாம். 

முதலாமாண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேரம் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையதளம் வாயிலாக 27.09.2024 வiர் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ சாதி சான்றிதழ்,  சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150/- ஆகும். SC/ST மாணவ / மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. 

மற்ற மாணவ / மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம்.  கல்லூரி குறியீட்டு எண் 118 ஆகும். இக்கல்லூரியில் DCE & ECE  ஆகிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள்  உள்ளன. அதில் ECE பாடப்பிரிவு மாணவிகளுக்கு மட்டும். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவ / மாணவிகள் சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மேலும் இக்கல்லூரி TNEA பொறியியல் மாணவர்கள் சேர்க்கை (TFC-50) சேவை மையமாக உள்ளதால் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 9600693388, 9585655506, 9578912267, 0461-2311647 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory