» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா : அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிக்கை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:29:15 PM (IST)
தூத்துக்குடியில் திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

அவர் முதலமைச்சராக இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். அன்னாருடைய 116-வது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 8:30 மணி அளவில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி பாளைரோடு காய்கனி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா முழு உருவச் சிலைக்கு தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளரான என்னுடைய தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக அளவில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்திடவும் கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
