» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:24:48 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன தற்போது மீன்வரத்து குறைவாக காணப்பட்டுவதாலும் மீன்களுக்கு விலை குறைவாக கிடைப்பதாலும் சமீப காலமாக குறைவான விசைப்படைகள் கடலுக்கு சென்று வந்தன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 13ஆம் தேதி மற்றும் நாளை 14ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 260 விசைப் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளன. அதே வேளையில் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன.
எவன்Sep 13, 2024 - 11:22:27 AM | Posted IP 162.1*****