» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
புதன் 11, செப்டம்பர் 2024 5:01:59 PM (IST)
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்
தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 67வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அவரது படத்திற்கு கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகிேயார் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.