» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செப்.15ம் தேதி வீடுகளில் கழக கொடி ஏற்றுவோம் : அமைச்சர் பி. கீதா ஜீவன் வேண்டுகோள்
புதன் 11, செப்டம்பர் 2024 4:03:18 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் அன்று செப். 15 ஆம் தேதி கழகத்தினர் அனைவர் வீடுகளிலும் கழகக் கொடியேற்றுவோம் என்று வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர்பி. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பேரியக்கம், அண்ணாவின் கொள்கை தம்பிகளால் வளர்க்கப்பட்டு அவரது தம்பிகளின் தலையாய தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 50-ஆண்டுகளுக்கு மேல் கட்டிக்காக்கப்பட்டு, இன்றைக்கு பவள விழாவை நிறைவு செய்கிறது.
முதல்வர், பாசமிகு தலைவர் தளபதியார் அன்புக் கட்டளைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய நகர பகுதி பேரூர்களில் அடங்கி உள்ள வார்டு கிளைகளில் உள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பித்து, வருகிற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அன்று காலை 09.00 மணிக்கெல்லாம் அனைத்து கிளைகளிலும் கழக முன்னோடிகளை வைத்து, கழக கொடியை ஏற்றிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள், இளைஞர் அணி மாணவர் அணி மகளிர் அணி உள்ளிட்ட கழக அணிகளின் நிர்வாகிகள் உட்பட ஒட்டுமொத்த கழகத்தினர் வீடுகளிலும் செப்டம்பர் 15 ஆம் தேதி காலையிலேயே கழக கொடியை ஏற்றி கழகக் கொடி, பட்டொளி வீசி பறப்பது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்திட வேண்டும் என்றும்,
"கட்டுக்கோப்பான தொண்டர்கள் நிறைந்த இயக்கம் தி.மு.க." என்பதை நாட்டு மக்களுக்கு பறை சாற்றிடும் வகையில் கழகத் தலைவரின் அன்புக் கட்டளைப்படி கழகத்தினர் அனைவரின் இல்லங்களிலும் கழகக் கொடியை கம்பீரமாக ஏற்றி, தி.மு.கழக பவள விழாவை கழகத்தினர் குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்றும், கழகத்தினர் அனைவரையும் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)











முட்டாள் மக்கள்Sep 11, 2024 - 06:09:13 PM | Posted IP 172.7*****