» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 11ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையர் தகவல்!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 3:34:32 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வருகிற 11ஆம் தேதி (புதன்கிழமை) மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக அடுத்த மண்டல முகாமானது வருகின்ற புதன்கிழமை (11.9.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 15 முதல் 19, 30 முதல் 37,42,44) மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்கள் 50 மற்றும் 51 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. 

மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் அவர்களிடம் அளிக்கலாம். 

மேலும் புதிய குடிநீர்/பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான விண்ணப்பங்களையும் மேற்படி முகாமில் சமர்ப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory