» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடாது - எஸ்பி அறிவுறுத்தல்!

திங்கள் 9, செப்டம்பர் 2024 8:21:50 PM (IST)

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வோர்கள் கடைபிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு விதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்    அறிவித்துள்ளார். 

செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே (கார் மட்டும்) செல்ல வேண்டும், வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.

மேலும் அஞ்சலி செலுத்த செல்பவர்கள் உட்கோட்ட காவல் அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட வாகன அனுமதி சீட்டை தங்களது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டி செல்ல வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். 

வாகனங்களில் மேற்கூரையில் அல்லது படிக்கட்டில் பயணித்தோ, ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. எந்தவித மதுபானங்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

RameshSep 11, 2024 - 12:27:10 AM | Posted IP 172.7*****

💯❤️

RameshSep 11, 2024 - 12:26:52 AM | Posted IP 162.1*****

💯❤️

RameshSep 11, 2024 - 12:26:51 AM | Posted IP 162.1*****

💯❤️

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory