» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா!

திங்கள் 9, செப்டம்பர் 2024 8:07:16 PM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரியின் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தனர். 

பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது தென் தமிழகத்திலேயே சிறப்பான அந்தஸ்தை பெற்ற கல்லூரியாகவும், மாணவர்களுக்கு திறமையான பேராசிரியர்கள் செயல்முறை திறன் பயிற்சியை அளிக்கிறார்கள். தொழில் ஆதரவு கல்விக்காக பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலை கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றபட்டுள்ளது என்று கூறினார்கள்.

நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், ‘முதலாண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை வாழ்த்துகிறோம் எமது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் சாதனை புரிவதற்கு எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்வியை கற்றுத்தருகிறார்கள். 

தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய அளவில் நவீன ஆய்வகங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதால், எங்கள் கல்லூரி மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். மாணவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் முகமது சாதிக் ஸ்காட் கல்வி குழும திறன் மற்றும் வேலைவாய்ப்பு துறை இயக்குநர் ரவிசங்கர், அனைத்து துறை பேராசிரியர்கள், முதலாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து

MaventhanSep 11, 2024 - 12:54:34 PM | Posted IP 162.1*****

Atleast in such Banners, Learn to Write Correctly in English

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory