» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் : மேயர்

புதன் 4, செப்டம்பர் 2024 9:53:47 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார். 

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மரம் நடும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தூய்மையானதாகவும் மாசில்லாமலும் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்று மாநகர மக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையிணையடுத்து சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பயன்படுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டார். 

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி  தெய்வேந்திரன்  கற்பகக்கனி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.


மக்கள் கருத்து

தமிழன்Sep 6, 2024 - 11:51:06 AM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள்.இதுபோல் பாலவிநாயகர் கோவில் தெருவில் சுகாதார வளாகம் அமைக்கவும். பாலவிநாயகர் கோவில் தெருவில் சிறுநீர் நாற்றம் தாங்கமுடியவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory