» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

சுகாதாரக் கேடு விளைவிக்கும் வெளிநாட்டு கழிவுகள்: தூத்துக்குடியில் இறக்குமதி!

ஆர்.முருகன் | வெள்ளி 5, மார்ச் 2010 6:37:49 PM (IST)

 
தூத்துக்குடி துறைமுகம் வழியாக கிரீஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பேப்பர் கழிவுகள் என்ற பெயரில் 20 கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட 470 மெட்ரிக் டன் நச்சுகழிவுகளை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு நச்சுகழிவுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக சுஙகத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கிரீஸ் நாட்டிலிருந்து ஸ்ரீபதி பேபப்பர் போர்டு என்ற நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட 11 கண்டெய்னர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 253.16 மெ.டன் எடையுள்ள காகித கழிவுகள் உள்ளதாக பில் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் கண்டெய்னரை திறந்து பார்த்த போது, இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட மிகவும் துர்நாற்றத்துடன் கூடிய, ஆபத்துகளை விளைவிக்க கூடிய மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டடது.

சோதனையில் அவை சுகாதாரக் கேடு விளைவிக்ககூடிய உடைந்த பொம்மைகள், பயன்படுத்திய மாதவிலக்கு சாதனங்கள், மருத்துவ கழிவுகள், பாட்டரிகள், உடைந்த சிடி போன்ற ஆபத்தான பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

காகித கழிவுப்பொருட்கள் உள்ளதாக கூறி டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் இறக்குமதி சான்று கொடுத்துள்ளதாக தெரியவந்தது. வதிமுறைகளை மீறி பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
இதேபோன்று, சங்கத்துறை அதிகாரிகள் சென்னையைச் சேர்ந்த விவிஆர் இம்பெக்ஸ் நிறுவனம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள செல்போன் உதிரி பாகங்கள் அடங்கிய கண்டெய்னரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாரும் பில் தாக்கல் செய்யாததால் அந்த கண்டெய்னரை அதிகாரிகள் திறந்து சோதனை மேற்கொண்டனர்.

அதில், செல்போன் உதிரிபாகங்கள் இருந்தன. ஆனால், ஒரு சில பெட்டிகளில் முன்னனி நிறுவனங்களான நோக்கியா, மோட்டரோலா, சோனி எரிக்சன், எல்ஜி நிறுவனங்களின் டிரேட் மார்க்களின் பெயரில் போலியான பேட்டரிகள், பேனல் போர்டுகள் மற்றும் சோனி நிறுவன முத்திரையுள்ள காதுகேள் சாதனங்களும், மேலும் பல்வேறு முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரங்களும் இருப்பதை கண்டு பிடித்தனர்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2கோடி எனத் தெரிகிறது. அதிகாரிகள் இந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதுபோன்று ஸ்பெயின், சவுதி அரேபியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து 9 கன்டெய்னர்களில் இருந்து நச்சுகழிவுகள் இறக்குமதி செய்த சுங்கத்துறையினர் அதனை திருப்பி அந்த நாடுகளுக்கே அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிட தக்கது.

இது குறித்து சுங்க இலாகா கமிஷ்னர் ராஜன் கூறுகையில்:
பேப்பர் கழிவுகள் என்ற பெயரில் வந்த கன்டெய்னர்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து சோதனையிட்டோம். அதில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் கழிவுகள் இருந்ததால் அதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய சோதனைக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் இவை நச்சுத்தன்மை கொண்டவை என சான்றளித்தனர்.

இதனையடுத்து 20 கன்டெய்னர்களையும் இறக்குமதி செய்த ஸ்ரீபதி பேப்பர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் அந்நிறுவனம் இக்கழிவுகளை திருப்பி அந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்க ஒத்துக்கொண்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் செலவிலேயே வரும் 15 நாட்களுக்குள் அனைத்து கன்டெய்னர்களும் திருப்பி அனுப்பப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போலி செல்போன் பாகங்கள், பாட்டரிகள், வாட்சுகள் போன்றவையும் பறிமுதல் செய்ப்பட்டு அவையும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்த பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவு பொருட்களுக்கு தடையில்லா சான்று அளித்த டெல்லியை தலைமையிடமாக கொண்ட வேல்டுவைடு இன்ஸ்பெக்சன் ஏஜென்சி என்ற நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads