» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 10:50:48 AM (IST)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 153-வது பிறந்தநாள் விழா வருகிற 5ஆம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் வ.உ.சியின் பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். துறைமுகத்தை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் நேரடியாக துறைமுகத்தின் கிரீன் கேட் பகுதிக்கு வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பிறகு துறைமுகத்தை பார்வையிட அனுமதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
R manoher vadamalaiyanSep 3, 2024 - 07:56:00 PM | Posted IP 162.1*****