» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் : ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவு!

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 8:31:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் 9 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு: திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு தனி வட்டாட்சியர் சங்கர நாராயணன் பணி மாறுதல் செய்யப்பட்டு எட்டயபுரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு விளாத்திகுளம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு கோயில்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவில்பட்டி வட்டாட்சியர் முரளிதரன் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் பணி மாறுதல் செய்யப்பட்டு திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு (அலகு 6) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தனி வட்டாட்சியர் சுந்தர ராகவன் பணி மாறுதல் செய்யப்பட்டு கயத்தார் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி - மதுரை வழி அருப்புக்கோட்டை அகலப்பாதை ரயில் திட்டம் (விளாத்திகுளம்) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாறுதல்கள் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், உடனடியாக மாற்றப்பட்டுள்ள புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory