» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

தேர்வில் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை செய்வதாக நூதன மோசடி: தாய்-மகன் கைது!

ஆர்.முருகன் | வெள்ளி 5, மார்ச் 2010 1:15:05 PM (IST)

12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண்ணையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் சாந்தி மெண்டிஸ். இவரது மகள் ஹார்ட்லின் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது 12ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சாந்தி மெண்டிஸிடம், அவரது மகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறி ஏசம்மாள் (45) என்ற பெண்ணும் அவரது மகன் தேவபிரியனும் அணுகியுள்ளனர். அவரும் மகள் மீது உள்ள அக்கறையில் சிறப்பு பிரார்த்தனைக்கு சம்மதித்துள்ளார்.

பிரார்த்தனை செய்தவற்காக பழங்கள் வாங்கி வரவேண்டும் என சாந்தி மெண்டிஸிடம் அவர்கள் கூறியுள்ளனர். அவரும் பழங்கள் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்தது, பிரார்த்தனை முடிந்தது அவர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சாந்தி மெண்டிஸ் தனது வீட்டில் இருந்த ரூ.20ஆயிரம் மதிப்புள்ள தங்க செயின் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியே சென்ற நேரத்தில் பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் வந்தவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் என்று உறுதி செய்த பின், காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஏசம்மாளையும், தேவப் பிரியனையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்க செயினை கைபற்றினர்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads