» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:27:52 AM (IST)
கோவில்பட்டியில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்குத் தாய் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். எட்டயபுரம் சாலையில் உள்ள பல்லக்கு ரோடு சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் 2பேரும் தப்பிக்க முயற்சித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் சுற்றிவளைத்து 2பேரையும் பிடித்தனர். அப்போது அந்த 2பேரும் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். அதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (23), வடக்குத்திட்டங்குளம் முத்து ராமலிங்கத்தேவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜன் (31) என தெரிய வந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைதுசெய்தனர்.