» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து ஆக.9 முதல் 14 வரை தொடர் இயக்கம் : தொழிற்சங்கங்கள் முடிவு!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:48:04 PM (IST)



தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து ஆக.9 முதல் 14 வரை பல்வேறு இயக்கங்களை நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினத்தில் இருந்து ஆகஸ்ட் 14 நள்ளிரவு பல்வேறு இயக்கங்களுக்கு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயக்கங்களை வெற்றிபெறச் செய்யும் வகையில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஐஎன்டியுசி மாநில துணைத்தலைவர் பி.கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது.

ஏஐடியுசி சார்பில் பாலசிங்கம், லோகநாதன், மனோகரவேல், சிஐடியு சார்பில, ரசல், அப்பாத்துரை, முருகன், டென்சிங் ஐஎன்டியுசி சார்பில் ராஜகோபாலன், சந்திரசேகரன்,, தொமுச சார்பில் சுசீ.ரவீந்திரன், கருப்பசாமி, லிங்கசாமி ஏஐசிசிடியு சார்பில் சிவராமன், சகாயம், ஹெச்எம்எஸ் சார்பில் ராஜகுமார், துறைமுகம் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய மோடி அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் உருவாக்கி ஜீலை 1 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திருப்பப் பெற வேண்டும். கார்பரேட்டுகளுக்கு ஆதரவான தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிற்சங்கங்களின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததையும், தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் தேவை நிதி ஒதுக்கீட செய்ய மறுத்ததையும், தமிழ்நாட்டின் உட் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு நிதி வழங்க மறுப்பதையும் கண்டித்து ஆக 10 முதல் தொடர் இயக்கங்கள் நடத்த மத்திய தொழிற்சங்சங்கங்களின் கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ள போராட்டங்களை தூத்தக்குடியில் வெற்றிகரமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆக. 10 அன்று தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தேசியக் கொடியேற்றி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று, அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம். ஆக 10 முதல் 13 வரை மாவட்டம் முழுவதும், தொழிலாளர்கள், மக்களிடம் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், புதிய குற்றவியல் சட்டங்களை திருப்ப்பெற வலியுறுத்தியும் 50000 துண்டு பிரசுரங்கள் விநியோகம்.

ஆகஸ்ட் 14 இரவு தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், எட்டையபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி,, ஆகிய 08 மையங்களில் ஜனநாயகத்தை காக்க விடியலைத் தேடி" இயக்கம் நடத்துவது என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அடிப்படையில் ஆகஸ்ட் மாத இயகக்ங்களை தூத்துக்குடியில் வெற்றிகரமாக நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory