» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணியை பாதுகாக்காவிடில் வரலாற்று பிழையாக மாறி விடும் : முத்தாலங்குறிச்சி காமராசு

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 12:21:00 PM (IST)



தாமிரபரணியை பாதுகாக்காவிடில் வரலாற்று பிழையாக மாறி விடும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம் மூக்குபீறி கிராமப்புறத் தமிழ் மன்றம் மாதாந்திரக்கூட்டம் மூக்குபீறி தமிழ் மன்ற அரங்கில் நடந்தது. மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, தேரிக்காட்டு எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். 

அவர் பேசும் போது தாமிரபரணி நதி சங்க காலத்தில் இருந்தில் புகழப்படும் நதியாகும். குடிதண்ணீர், மின்சாரம், தொழிற்சாலை, விவசாயம் என பல்வேறு வகையில் நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பயன்தருகிறது. இந்த நதியை நாம் பேணி பாதுகாக்கவேண்டும். ஆங்கிலேய கலெக்டர் பக்கிள் துரை காலத்திலேயே தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதிகையில் உள்ள மரங்களை வெட்டி தேயிலை தோட்டம் அமைக்க கூடாது என இங்கிலாந்து சென்று தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளார். 

அதோடு மட்டுமல்லாமல் பொதிகை மலையில் மரங்களை வெட்டினால் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் பாலைவனமாக மாறி விடும் என எழுதி வைத்து சென்றுள்ளார். எனவே நதியை பாதுகாக்க தவறினால் நம் மாவட்டத்தில் வரலாற்று பிழையாக மாறி விடும். எனவே நதியை காப்பாற்ற ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் வீரபாலாஜி, ஜான் பிரிட்டோ, கணேசன் , மந்திரம், அந்தோணி ராஜ், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மூக்குபீறி கிராமப்புறத் தமிழ் மன்ற உறுப்பினர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory