» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய துறைமுக கடற்கரையில் ஆடி அமாவாசை விழா
ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 6:03:09 PM (IST)

தூத்துக்குடியில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் வழிபாடு செய்தனர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தை அமாவாசை ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் தர்ப்பணம் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் குவிந்தனர். கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புதிய துறைமுகம் கடற்கரையில் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புதிய துறைமுகம் கடற்கரை பகுதிக்குள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தர்ப்பணம் கொடுத்தவர்கள் பின்னர் ஆலயம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
