» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நிலை மோசமாக உள்ளது: தேசிய நல ஆணையர்
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 3:49:50 PM (IST)

தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நிலை மோசமாக உள்ளது என்று தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையர் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அவர்களை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் , மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தூய்மைப் பணியாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் நேடியாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு பிஎப், இன்சூரன்ஸ் போன்ற பிரச்சனைகள் வராது. அவர்களின் நலனுக்காக 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. குப்பைகளை டெண்டர் விட்டு தனியார் லாபம் பார்க்கிறார்கள். அதனை தூய்மைப் பணியாளர்களின் சொசைட்டிக்கு வழங்க வேண்டும். மகராஷ்டிராவில் அரசு வணிக வளாகங்களில் 5 சதவீதம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், 1 ஒரு சதவீதம் தூய்மைப் பயாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாழ்க்கை தரம் உயர்கிறது.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்தால் அவர்கள் மலக்குழியில் இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. மலக்குழியில் இறங்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் அதிகம். கடந்த 1993 முதல் இது வரை 255பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தூய்மை பணியாளர் நிலை தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ளது. எனவே, தமிழக அரசு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) விக்னேஷ்வரன் , தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பொற்செல்வன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)

கோவிலில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
செவ்வாய் 25, மார்ச் 2025 8:34:54 AM (IST)
