» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆக.9ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்!
புதன் 31, ஜூலை 2024 5:55:25 PM (IST)
தூத்துக்குடியில் வருகின்ற ஆக.9ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 09.08.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் கோரம்பள்ளத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.
மேலும், இம்முகாமில் வேலையளிக்கும்(Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய கலந்து கொள்ளலாம் எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, DIPLOMA, I.T.I., டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரம் (Bio data) மற்றும் கல்விசான்றுகளுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள்(Employers) மற்றும் வேலைநாடுநர்கள்(Job seekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களைப் பதிவு செய்தல் வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு,கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
