» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓலா, ஊபர் டாக்சிக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் - ஆட்டோ டிரைவர்கள் முடிவு!

புதன் 31, ஜூலை 2024 4:10:47 PM (IST)



ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்சிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் பதிவு செய்யக்கூடிய வழக்கை கைவிட வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் நிதி ஒதுக்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவதற்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும். ஆட்டோ எப்சி கட்டணம் குறைக்க வேண்டும். பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு லட்ச ரூபாய் மானியத்தை ஆண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வணங்க வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்கள் விபத்து மரணம் ஏற்பட்ட ஐந்து லட்சம் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆட்டோ ஓட்டு உரிமை (பேட்ஜ்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளி உயர்கல்வி மேற்படிப்புக்கு நிதி உதவி உயர்த்தி தர வேண்டும். எப்சி பெர்மிட் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.

ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி சங்கத்தின் சார்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன், மணிவண்ணன், திருப்பதி வெங்கடேஷ், சக்திவேல், சுரேஷ், மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

ஆனந்த்Jul 31, 2024 - 04:48:03 PM | Posted IP 172.7*****

சைக்கிள் ரிக்ஷாவுக்கு இந்த சலுகைகள் இருக்கிறதா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory