» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதன் 31, ஜூலை 2024 3:20:20 PM (IST)


தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீருக்கு அடுக்கு விகித முறையில் கட்டணம் நிர்ணயம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணம்  அடுக்கு விகித முறையில் வசூலிப்பது, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிப்பது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசும்போது, "குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், குடிநீர் இணைப்புகளுக்கு அளவு மானி இல்லாத காரணத்தினால் அடுக்கு விகித முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார். 

மாநகராட்சி உறுப்பினர் சுரேஷ் பேசும்போது, "தூத்துக்குடி 2ஆம் கேட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருமண மண்டபத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் என்.பெரியசாமியின் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிAug 1, 2024 - 12:20:09 AM | Posted IP 172.7*****

அப்பா, மகன், மகள்... என ஒரு குடும்ப சொத்தாக தூ.டி யை உருவாக்கி இருக்கிறார்கள். புதிதாக கட்டபட உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு வேறு ஒரு பெயரை தேர்ந்தெடுங்கள். தூ.டி ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

வெங்கடேஷ்Jul 31, 2024 - 07:32:04 PM | Posted IP 162.1*****

எங்களது பகுதியில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது பன்னிரண்டாவது வார்டு ஸ்டேட் பாங்க் காலனி செவன்த் டே பள்ளி அருகில் வடபுறம் உள்ள தெருவில் மாமன்ற தலைவர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் தயவு செய்து இதை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education



Thoothukudi Business Directory