» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்!
புதன் 24, ஜூலை 2024 4:09:31 PM (IST)
எட்டயபுரத்தில் பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2023 -24 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் ஒளிவு மறைவு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் ராபி பருவத்திற்கு மக்காச்சோளம் கம்பு சோளம் உள்ளிட்ட பயிரிடிய சாகுபடி செய்ய வீரிய ஒட்டு ரக விதைகளை தர நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலக்கரந்தை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வருவதால் மேலக்கரந்தை பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி விவசாயிகள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தையில் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டையாபுரம், முத்துலாபுரம், மேலக்கரந்தை, படர்ந்தபுளி, புதூர், காடல்குடி உள்ளிட்ட பிர்காவுக்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் மதுரை -தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் 3 பேருந்துகளில் கைது செய்து மேலக்கரந்தையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர், ஆனால் கைது செய்து அடைக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இந்த மண்டபத்தில் போதிய வசதிகள் இல்லை என்று மண்டபத்தின் வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர், அதன் பின் காவல்துறையினர் அனைத்து விவசாயிகளும் மற்றொரு மண்டபத்தில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
கு வெங்கடேசன்Jul 26, 2024 - 07:52:20 AM | Posted IP 162.1*****
சென்ற ஆண்டு சம்பா சாகுபடி 9 10 ஆம் மாதங்களில் தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இன்னும் வரவில்லை டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டது எனவே பயிர் காப்பீடு தற்சமயம் விவசாயிகளுக்கு வழங்கினால் ஆறுதலாக இருக்கும் மேலும் தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தல்லுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்
PRAKASH MJul 25, 2024 - 02:08:27 PM | Posted IP 172.7*****
wanted that paddy give the every years ..M.PRAKASH ARAKONAM
k,shanmugamJul 25, 2024 - 06:29:33 AM | Posted IP 162.1*****
vivasai
தென்னரசுJul 26, 2024 - 12:09:14 PM | Posted IP 172.7*****