» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடிபி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா
புதன் 24, ஜூலை 2024 3:06:51 PM (IST)

தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஸ்டீபன் தியாகராஜன் , அவரது துணைவி மெர்ஸி ஸ்டீபன் (ஹோலிகிராஸ் இஞ்சினியரிங் கல்லூரி உடற்கல்வி இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பால்கனி வரவேற்புரை ஆற்றினார். விழாவின் தொடக்கமாக மாணவியரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.
தேசிய மாணவர் படை, ஜுனியர் ரெட் கிராஸ், சாரண சாரணியர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பெருமிதத்துடன் அணிவகுத்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் ஸ்டிபன் போட்டிகளைத் தொடங்கிவைக்க பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். சிறப்பு விருந்தினர் மெர்ஸி தங்களது உரையில் விளையாட்டினால் உடலுக்கும், எதிர்காலத்திற்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜுலியட் பிரேம்குமாரி விளையாட்டு ஆண்டறிக்கையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை ஆற்றினார். பள்ளியின் முதன்மை நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி, தலைமையாசிரியை அனிதா ஹாரி, உதவி தலைமை ஆசிரியை ப்ரியா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)
