» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 5:59:31 PM (IST)
தூத்துக்குடி அருகே போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் காசி பாண்டியன் (32). இவர் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் இன்று மதியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுகுறித்த தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும்போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் காசி பாண்டியன் கடந்த 17ஆம் தேதி ஏர்வாடிக்கு பணிக்கு செல்வதாக கூறி சென்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் தற்கொலைக்கு காரணம் என்ன குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
LaksmananJul 23, 2024 - 09:43:53 PM | Posted IP 172.7*****
I need jop
LAKSHMANAN LakshmananJul 23, 2024 - 09:43:24 PM | Posted IP 172.7*****
I need you jop
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)

Ip addressJul 24, 2024 - 07:52:47 AM | Posted IP 172.7*****