» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை : தூத்துக்குடியில் 26ஆம் தேதி சிறப்பு முகாம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 5:56:46 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 26ஆம் தேதி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் Reliance Jio infocomm நிறுவனத்திற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.
Reliance Jio infocomm நிறுவனத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 4360 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள்(பொறியாளர்கள் தவிர) கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பகுதிநேரம் (Part time ) அல்லது முழுநேரம்(Full time) பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விசான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் அலுவலக தொலைபேசி எண். 0461 – 2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
A.KarthikJul 25, 2024 - 07:19:07 PM | Posted IP 172.7*****
Subaitha Banu NJul 25, 2024 - 06:30:03 PM | Posted IP 172.7*****
Work
ArunkumarJul 24, 2024 - 02:50:09 PM | Posted IP 162.1*****
My number 9500973562
Abdul RahmanJul 24, 2024 - 10:54:10 AM | Posted IP 162.1*****
Work
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)

Cherma duraiJul 25, 2024 - 09:32:58 PM | Posted IP 162.1*****