» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

திங்கள் 15, ஜூலை 2024 10:36:26 AM (IST)



தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். 

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள விவிடி தொடக்கப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினனர் கனிமொழி கருணாநிதி,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர்கள் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.

 

முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவண குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education



New Shape Tailors





Thoothukudi Business Directory