» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூறாவளிக் காற்றில் சாலையில் மரம் விழுந்து : போக்குவரத்து பாதிப்பு
திங்கள் 15, ஜூலை 2024 8:08:23 AM (IST)

ஆத்தூரில் சூறாவளிக் காற்றில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நேற்று சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஆத்தூர் அருகே நரசன்விளையில் அரசமரம் வேருடன் சாய்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனங்கள் முக்காணி ரவுண்டானா வழியாக ஏரல், குரும்பூர், நல்லூர், ஆறுமுகனேரிக்கு வந்தன. ஆறுமுகனேரியிலிருந்து சென்ற வாகனங்கள் நல்லூர், குரும்பூர், ஏரல் வழியாக முக்காணி ரவுண்டானா வந்து சென்றன. விடுமுறை நாள் என்பதால், திருச்செந்தூருக்கு தூத்துக்குடி வழியாக வாகனங்களில் வந்தோர் மாற்றுவழி காரணமாக அவதிக்குள்ளாகினர். அதிகாரிகள் வந்து ஒரு மணி நேரத்தில் மரத்தை அப்புறப்படுத்தியதையடுத்து, போக்குவரத்து சீரானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ரோச் பூங்காவவை செப்பனிட்டு பராமரிக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:40:35 PM (IST)

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை
புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)
