» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 14, ஜூலை 2024 12:46:08 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மச்சாது நகர் கங்கா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெத்துபாண்டி இவரது மனைவி பரமேஸ்வரி (44), இவர் நாசரேத் சென்று விட்டு பின்னர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தார். மச்சாது நகரில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்துள்ளான். 

அப்போது சுதாகரித்துக் கொண்ட பரமேஸ்வரி தாலி செயினை பிடித்துக் கொள்ளவே. செயின் அறுந்து, பாதிச் செயின் கொள்ளையன் கையில் சிக்கியது. பின்னர் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து அந்த கொள்ளையனை தேடி வருகிறார். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

ManashaJul 15, 2024 - 09:44:28 AM | Posted IP 172.7*****

Thoothukudi la Munna appatilam illa eppom ora kolla kolai eppati than nadakku😠

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory