» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக பெண் கவுசிலரை கண்டித்து குழியில் இறங்கி பெண் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 13, ஜூலை 2024 3:39:58 PM (IST)



தூத்துக்குடியில் திமுக பெண் கவுசிலரை கண்டித்து குடிநீர் குழாய்க்காக தோண்டிய குழியில் பெண் இறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி 41வது வார்டு பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வீட்டுக்கு வீடு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பின் அந்த பணம் திருப்பி வழங்கப்பட்டது. இது திமுக மாமன்ற உறுப்பினர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 47வது வார்டு பகுதியில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் திமுக மாமன்ற உறுப்பினர் ரெக்ஸிலின் முறைகேடான முறையில் குடிநீர் இணைப்பு வழங்கியதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி போராடினார்.

அப்போது அங்கு இருந்த திமுக மாமன்ற உறுப்பினர் அப்புறப்படுத்த முயன்று, அவரை அவதூறாக பேசி விமர்சித்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை படம்பிடித்த நபரையும் தகாத வார்த்தைகளால் மிரட்டினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


மக்கள் கருத்து

thamilJul 15, 2024 - 12:00:41 PM | Posted IP 162.1*****

lionstown

மக்கள்Jul 13, 2024 - 03:57:20 PM | Posted IP 172.7*****

47வது வார்டு அது எந்த ஏரியா கூற முடியாதா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory