» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூப் 1 தேர்வு: 5595 பேர் பங்கேற்பு!
சனி 13, ஜூலை 2024 11:37:36 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வவை 5595 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 1798பேர் தேர்வு எழுதவில்லை.
தமிழகத்தில் துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, வணிகவரிகள் உதவி ஆணையர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 21, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் தலா 1 என மொத்தம் 90 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 28-இல் வெளியிடப்பட்டது.
இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று இன்று காலை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 5595பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 5595 பேர் தேர்வு எழுதினர். 1798பேர் எழுதவில்லை. குரூப் 1 தேர்வு நடைபெறும் மையமான தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1 முதல்நிலை தேர்வு) பதவிகளுக்கான கொள்குறி வகைத் தேர்வு இன்று (13.07.2024) முற்பகல் மட்டும் (09.30 முதல் 12.30 வரை) நடைபெற்றது. இத்தேர்வு எழுத மொத்தம் 5,595 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். தூத்துக்குடி வட்டத்தில் மட்டும் உள்ள 19 தேர்வு மையங்களில் இன்று 3797 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர்.
1798 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வு பணியில் 19 தேர்வு மையங்களில் வருவாய்துறையைச் சேர்ந்த 19 ஆய்வு அலுவலர்களும், 05 மொபைல் குழுக்களும், 02 பறக்கும் படைகளும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோரம்பள்ளம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கும் தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வாரம் 6 நாட்கள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி படிப்பகம், அறிவுசார் மையங்கள், மாவட்ட நூலகம், நகர்ப்புறம் மற்றும் ஊரக நூலகங்கள் ஆகியவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு அங்கு படிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பயன்படுத்திக்கொண்டு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
Selvaraj AJul 14, 2024 - 12:17:39 PM | Posted IP 172.7*****