» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பங்கேற்பு!

புதன் 10, ஜூலை 2024 4:46:16 PM (IST)



தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மனு கொடுக்க வந்த 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். மனு கொடுக்க வந்த வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரை தளத்திற்கு சென்று புகார் மனுவை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

jaamaniyanJul 10, 2024 - 05:51:48 PM | Posted IP 172.7*****

முதலில் தூத்துக்குடியில் வாகனம் ஓட்டும் காவலர்களை தலைகவசம் அதாவது ஹெல்மெட் [helmet] கட்டாயம் அணிய செய்யுங்கள்... மாற்றம் உங்களிடம் இருந்து ஆரம்பம் ஆகட்டும்.. இந்த குறையையும் குறைவு இல்லாமல் தீர்த்து வையுங்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory