» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரவு நேரங்களில் ஆட்டோ பேட்டரி திருட்டு : எஸ்பி அலுவலகத்தில் இந்து முன்னணி புகார்!
புதன் 10, ஜூலை 2024 4:17:13 PM (IST)
தூத்துக்குடியில் இரவு நேரங்களில் ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடப்படுவதாக எஸ்பி அலுவலகத்தில் இந்து ஆட்டோ முன்னணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி வெங்கடேஷ் அளித்த மனுவில், "தூத்துக்குடியில் தற்போது சில வருடங்களாக அனைத்து பகுதிகளிலும் மர்மநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட முக்கியமாக இரவு நேரங்களில் ஆட்டோவில் உள்ள பேட்டரிகளை மட்டுமின்றி தற்போது ஆட்டோவையே திருடி வருகின்றனர்.
இது பற்றிய புகார்கள் அனைத்து காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரமே இந்த ஆட்டோ வைத்து தான் இருக்கிறது. நாங்கள் தொழில் செய்து வரும் இந்த பயணிகள் ஆட்டோ அதிகமாக களவு போவதால், ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் களக்கத்துடன் இருந்து வருகிறார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தொழில் இழப்பு ஏற்படுகிறது.
எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றோம்.ஆகையால் தாங்கள் தயவு கூர்ந்து மேற்படி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும்படியும், ஏற்கனவே தொலைந்து ஆட்டோ மற்றும் ஆட்டோ பேட்டரிகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.