» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 10ஆம் தேதி குறை தீர்க்கும் முகாம் - ஆணையர் தகவல்!
திங்கள் 8, ஜூலை 2024 4:03:02 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 10ஆம் தேதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முகாமானது வருகின்ற 10/07/2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 15 முதல் 19, 30 முதல் 37, 42, 44 ) மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 50 , 51) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மாண்புமிகு மேயர் அவர்களிடம் அளிக்கலாம். எனவே, மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தாங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)

த. மயில்ராஜாJul 8, 2024 - 08:37:57 PM | Posted IP 162.1*****