» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விஷ வண்டுகள் அச்சுறுத்தல்: எப்சிஐ குடோனில் ஆய்வு செய்ய அதிமுக கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 11:33:43 AM (IST)

தூத்துக்குடியில் எப்.சி.ஐ., குடோன் பகுதியில் இருந்து பரவி வரும் விஷவண்டுகளை ஒழிக்க அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி பாளை ரோட்டில் அமைந்துள்ள இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான (F.C.I) குடோனில் சமீப காலமாக உற்பத்தியாகும் ஒரு வித விஷவண்டுகள் அருகில் அமைந்துள்ள மக்கள் அதிகம் வசிக்கும் தபால் தந்தி காலனி, பசும்பொன்நகர், ஆசிர்வாதநகர், முத்துநகர், இந்திராநகர், திரு.வி.க நகர் பகுதிகளில் பரவி உணவுப் பொருட்களிலும், பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரையும் கடித்து ஒருவித ஊரல் நோய் ஏற்பட்டு மக்கள் தூக்கம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
மேலும் உணவு பொருட்களில் விழுவதால் உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது. 3வது மைல் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனரின் கண்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே தாங்கள் மேற்படி FCI குடோனை நேரில் களஆய்வு செய்து விஷ வண்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
