» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் துணை வட்டாட்சியர்கள் பணி நியமனம், இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 5, ஜூலை 2024 11:49:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியர் நிலையில் பணிபுரிந்து வரும் 27 அலுவலர்களுக்கு பின்வருமாறு மாறுதல்களும், நியமனங்களும் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக கே.பிரிவு முன்னாள் தலைமை உதவியாளர் பி.சுரேஷ் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலக கலைஞர் மகளிர் திட்டம் தனித்துணை தாசில்தாராகவும், ஆட்சியர் அலுவலக ஐ-பிரிவு முன்னாள் தலைமை உதவியாளர் மரியவியாகுல ஜெயா, தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு தனிதாசில்தாராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் வி.பொன்செல்வி திருச்செந்தூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்,
கோவில்பட்டி சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட நில எடுப்பு முன்னாள் துணை தாசில்தார் செல்வலட்சுமி எட்டயபுரம் தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும், சாத்தான்குளம் தாலுகா முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர், மீண்டும் வட்ட்ட வழங்கல் அலுவலராகவும், ஓட்டப்பிடாரம் தாலுகா மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு பிரிவு துணை தாசில்தாராகவும்,
திருச்செந்தூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் தங்கமாரி, ஏரல் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், எட்டயபுரம் தாலுக மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், தூத்துக்குடி உதவி இயக்குனர் (ஆயம்) அலுவலக கண்காணிப்பாளராகவும், சாத்தான்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தார் தாகீர் அகமது, ஸ்ரீவைகுண்டம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், கோவில்பட்டி தாலுகா மண்டல துணை தாசில்தார் செந்தில்முருகன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக இ-பிரிவு தலைமை உதவியாளராகவும், தூத்துக்குடி தாலுகா மண்டல துணை தாசில்தார் மைக்கேல் சார்லஸ் ராஜா, சாத்தான்குளம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்,
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் ராமச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் பொன்னம்மாள், கோவில்பட்டி தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும், தூத்துக்குடி கோட்டாட்சியர்அலுவலக கலைஞர் மகளிர் திட்டம் தனித்துணை தாசில்தார் கயத்தார் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக இ-பிரிவு தலைமை உதவியாளர் ரேவதி, கயத்தார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போன்று தூத்த்துக்குடி ஆட்சியர் அலுவலக வரவேற்பு பிரிவு துணை தாசில்தார் ரமேஷ், தூத்துக்குடி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் அய்யனார், சாத்தான்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும்,
கயத்தார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், கயத்தார் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், ஏரல் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமர், திருச்செந்தூர் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் கலைஞர் மகளிர் திட்ட தனித்துணை தாசில்தார் செல்வலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாலுகா மண்டல துணை தாசில்தார்-2 ஆகவும், கோவில்பட்டி தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் வெள்ளத்துரை, கோவில்பட்டி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், கயத்தார் தாலுகா மண்டல துணை தாசில்தார் ஜெயலட்சுமி, எட்டயபுரம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும்,
சாத்தான்குளம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, ஏரல் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கயத்தார் தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் திரவியம், கோவில்பட்டி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், எட்டயபுரம் தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் சண்முகவேல், கயத்தார் தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ரகுபதிராஜா, தூத்துக்குடி தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும், தூத்துக்குடி நெடுஞ்சாலைப்பணிகள் நில எடுப்பு துணைதாசில்தார் சுல்தான் சலாகுதீன், ஸ்ரீவைகுண்டம் தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
MR.E.THANGAPERUMAL.TN:3202406294629Sep 12, 2024 - 03:37:53 PM | Posted IP 172.7*****