» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி எம்.பி.யாக கனிமொழி பதவியேற்பு!
செவ்வாய் 25, ஜூன் 2024 7:58:22 PM (IST)

மக்களவையில் தூத்துக்குடி தொகுதியின் உறுப்பினராக கனிமொழி கருணாநிதி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம் கனிமொழி கருணாநிதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதியில் மற்ற வேட்பாளரை விட கனிமொழி கருணாநிதி 72.65 சதவீத வாக்கு வித்தியாசம் பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில், 18வது மக்களவையில், தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் ராதா மோகன் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயம் வளம்பெற தூத்துக்குடி மேல்மருவத்தூர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 2:40:34 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

SudhaJun 26, 2024 - 01:46:15 AM | Posted IP 162.1*****