» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம்!
செவ்வாய் 25, ஜூன் 2024 3:11:21 PM (IST)
புளியங்குளத்தில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் சஹாசங்கா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது.இம் முகாமில் 96 நபர்கள் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த 72 நபர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஹேண்ட் இன்ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மதுரைஅழகர் தலைமை வகித்தார். புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஊராட்சி செயலாளர் சின்ன கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் மனோ ரஞ்சித் , காசாளர் செல்வராஜ் வங்கி நடைமுறைகள், சேமிப்பு மற்றும் காப்பீடு பற்றி சிறப்புரையாற்றினார்.
வங்கி உதவியாளர் ,வங்கி வணிக தொடர்பாளர் கோகிலா காப்பீடு பதிவு செய்து அனைவரையும் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கள ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி, பயிற்றுநர் கஸ்தூரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்றுநர் முருகலக்ஷ்மி நன்றி கூறினார்