» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பச்சிளங்குழந்தைகளுக்கு குடல் அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!
செவ்வாய் 25, ஜூன் 2024 12:28:26 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடல் அடைப்புடன் பிறந்த 4 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் கூறியது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த மே மாதம் முதல் இது வரை குடல் அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட 4 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் பிறந்த 3 நாள்களில் குடல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வெங்கட சரவணன், உதவிப் பேராசிரியர் முத்துக்குமரன் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தக் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள், பரிசோதனைக்காக இன்று கொண்டு வந்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், 4 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்றார்.
இந்நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வெங்கட சரவணன், உதவிப் பேராசிரியர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)








