» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீர்ப்பாசன சங்க தலைவர் கொலையில் விவசாயி கைது: பரபரப்பு வாக்குமூலம்!
ஞாயிறு 23, ஜூன் 2024 8:08:05 PM (IST)
தூத்துக்குடி அருகே நீர்ப்பாசன சங்க தலைவர் கொலை வழக்கில் போலீசார் விவசாயியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை அடுத்த பாலாறுபட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (57). விவசாயி. இவர் கல்மேடு பகுதி நீர்பாசன சங்க தலைவராக இருந்தார். நேற்று அவர் பாலாறு பட்டி அருகே உள்ள கல்மேடு செல்லும் கடற்கரையை ஒட்டிய பாதையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து தருவைகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினார். அப்போது முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான இளையராஜா (47) என்பவர், கம்பால் தாக்கி சண்முக சுந்தரத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாலாறுபட்டியையும், பட்டின மருதூரையும் இடையில் ஒரு சாலை மட்டுமே பிரிக்கிறது. இந்த 2 கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்களிலும் அடிக்கடி 2 தரப்பையும் சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக நீர்பாசன சங்க தலைவர் என்ற முறையில் சண்முக சுந்தரம் அடிக்கடி காவல் நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். விவசாயிகளுடன் சமரசம் பேசுவது போன்ற செயல்களையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடு, மாடு மேய்ந்த தகராறில் இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி சண்முகசுந்தரம் சென்றுள்ளார். அப்போது வழியில் நின்ற இளையராஜா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஆத்திரத்தில் கம்பால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இளைய ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு தள்ளிவைப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:04:39 AM (IST)

செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன விழா
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:54:41 AM (IST)

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:20:26 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,183 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:20:38 AM (IST)
