» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 35பேருக்கு சிங்கப்பெண் விருது: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

ஞாயிறு 23, ஜூன் 2024 7:25:24 PM (IST)தூத்துக்குடியில் பெண்கள் அமைப்பின் ஆண்டு விழாவில் 35 பெண்களுக்கு சிங்கப்பெண் விருதினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.  

தூத்துக்குடி கைலாஷ் மஹாலில் 'விவாதிக்கலாம் பெண்கள் அமைப்பின்' மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 35 பெண்களுக்கு சிங்கப்பெண் விருதினை  வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பெண்கள் அமைப்பின் இயக்குனர் ராஜன், தலைவர்  உமா காசிதங்கம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்  ஜெயினி பிரான்சினா, ஆடிட்டர்  ரோகிணி லட்சுமணன், அரிமா மாவட்டத்தின் முதல் பெண்மணி  பிரமிளா பிரான்சிஸ் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory