» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் மோதியதில் 3பெண்கள் உடல் நசுங்கி சாவு : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 23, ஜூன் 2024 10:46:47 AM (IST)

தூத்துக்குடி அருகே கார் மோதியதில் 3பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பலவேசம் மனைவி நட்டார் சாந்தி (45), சுந்தரம் மனைவி சண்முகத்தாய் (49), தேவர் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மனைவி பார்வதி (40), சித்திரவேல் மனைவி அமராவதி (50) ஆகிய நான்கு பெண்களும் முக்காணி தேவர் தெருவில் உள்ள ரோட்டோரம் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த ஒரு இன்னோவா கார் அதிக வேகமாக வந்ததில் ரோட்டோரம் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 4பெண்கள் மீது மோதியது. மேலும், பைப்புகளையும் நொறுக்கியது பின்பு தடுப்பு சுவரில் கார் மோதி நின்றது இந்த பயங்கர விபத்தில் நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகிய 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த சண்முகத்தாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பெண்கள் பிணத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்த இடத்தை திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த ராஜன் பார்வையிட்டார்.
மேலும், காரை ஓட்டி வந்த ஏரல் அருகே உள்ள பெருங்குளம் உடையடி தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் மணிகண்டன் (27) என்ற கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)

pothujanamJun 24, 2024 - 09:54:44 AM | Posted IP 162.1*****