» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபர் கைது!

வெள்ளி 21, ஜூன் 2024 10:41:45 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் ராஜேஷ் (42). இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது மனைவியுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ரூபாய் 450 பணத்தை திருடினார்.

உடனே அருகில் இருந்த பக்தர்கள் அந்த வாலிபரை பிடித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், நெல்லை சுத்தமல்லி வஉசி தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் கரிஹரசுதன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.  இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory