» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி!

வெள்ளி 21, ஜூன் 2024 10:35:52 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் தென்கரை மகாராஜன் (56). கூலித் தொழிலாளி. இவர் தூத்துக்குடியில் இருந்து சில்லாநத்தம் கிராமத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சாமிநத்தம் அருகே செல்லும்போது பைக் திடீரென்று நிலை தடுமாறி விபத்துக்குள்ளனாது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory