» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஷ பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலி!

வெள்ளி 21, ஜூன் 2024 10:34:28 AM (IST)

புளியம்பட்டி அருகே விஷ பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள சிங்கத்தாகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்தவர் வேலப்பன் மனைவி மீனா (41). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு அவரை கடித்ததுள்ளது. இதில் மயக்கம் அடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூக்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory