» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்!
வெள்ளி 21, ஜூன் 2024 8:21:47 AM (IST)
தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் வழியாக மைசூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் தென்மேற்கு மண்டல ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வ.எண்.16235) தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்கும், காலை 10.20 மணிக்கு மைசூருவுக்கும் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16236) மைசூருவில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 10.45 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 2 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.
மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், புகளூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர், கார்மேலரம், பெங்களூரு கண்டோன்மெண்ட், பெங்களூரு, ஹெங்கேரி, ராமநகரம், சென்னாபட்டணம், மடூர், மாண்டியா, பாண்டவபுரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பொதுவாக ரயில்களில் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பு இருக்கைகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதற்கிடையே, இந்த ரயிலில் இரு மார்க்கங்களிலும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் முன்னதாக இருக்கை உறுதி செய்து பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இது குறித்து தென்மேற்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த ரயிலில் முன்பதிவு வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய ரயில் எண் வழங்கப்பட்டு, வழக்கம் போல முன்பதிவு செய்யலாம். எனவே பயணிகள் பயப்பட தேவையில்லை. மேலும் இது ரயில் எண் மாற்றப்படும் போதும், எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றப்படும் போதும் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

A GIRIJun 21, 2024 - 01:46:48 PM | Posted IP 162.1*****